தெலங்கானா வலியுறுத்தி போராடிய மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு.
ஐதராபாத்: தெலங்கானா தனி மாநில கோரிக்கை வலியுறுத்தி உஸ்மானியா
பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படித்து வந்த மாணவர் ஒருவர் நேற்று தற்கொலை
செய்து கொண்டார். இதை தொடர்ந்து மாணவர்கள் வன்முறையில் இறங்கினர். போலீசார்
மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. பதிலுக்கு போலீசார் மாணவர்கள் மீது
கண்ணீர் புகை குண்டு வீசினர்.
இதனால் ஐதராபாத்தில் பதற்றம் ஏற்பட்டது.
ஆந்திராவில் தெலங்கானா பகுதியை தனி மாநிலமாக அறிவிக்கக்கோரி கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்தில் ஐதராபாத்தில் உள்ள உஸ்மானிய பல்கலைக்கழக மாணவர்கள் முக்கிய பங்கெடுத்து வருகின்றனர். இதுவரை தெலங்கானா போராட்டம்
காரணமாக மொத்தம் 873 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 463 பேர் மாணவர்கள்.இந்நிலையில் நேற்று காலை உஸ்மானியா பல்கலைக்கழகம் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு சந்தோஷ்குமார் என்ற பிஎச்டி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். தெலங்கானா தனி மாநில விவகாரத்தில் மத்திய அரசு காலதாமதம் ஏற்படுத்துவதை கண்டித்து தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்திருந்தார்.
அடிலாபாத்தை சேர்ந்த இவர் எம்எஸ்சி, பி.எட் படித்து விட்டு பிஎச்டி படிப்புக்காக கடந்த ஆண்டு தான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
பிரேத பரிசோதனைக்குப்பின் அவரது சடலத்தை 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். தெலங்கானாவுக்கு ஆதரவாக கோஷம்
எழுப்பினர். பின்னர் அடிலாபாத்திலிருந்து வந்திருந்த அவரது பெற்றோர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. வன்முறை ஏற்படலாம் என்ற அச்சத்தில் பல்கலைக்கழகத்துக்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். திடீரென போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. பேருந்துகள் மீதும் கல்வீசப்பட்டது.
இதை தொடர்ந்து மாணவ்£களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். சில மணி நேரம் அங்கு பதற்றம் நிலவியது. கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு
வரப்பட்டது.

ஒரே ஒரு இந்தியர் வெற்றி!
வாஷிங்டன்: அமெரிக்க தேர்லில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியினர் ஐந்து
பேரில், ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க தேர்தலில், இந்திய
வம்சா வளியினர், ஒன்பது பேர், வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். கடைசி
நேரத்தில், நான்கு பேர் போட்டியிலிருந்து விலகினர். ஐந்து பேர் மட்டும்
களத்தில் இருந்தனர்.
நியூஜெர்சியிலிருந்து உபேந்திரா சிவுக்லா, கலிபோர்னியாவிலிருந்து அமி பெரா மற்றும் ரஞ்சித், பென்சில்வேனியாவிலிருந்து மனன் திரிவேதி, மிச்சிகனிலிருந்து சையத் தாஜ் ஆகியோர் போட்டியிட்டனர். இதில், ரஞ்சித் மட்டும் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்; மற்றவர்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள்.
கலிபோர்னியாவில் போட்டியிட்ட, அமி பெரா,45, மட்டும் பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகியுள்ளார்.
இவர் மயிரிழையில் வெற்றி பெற்றுள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளரான அமி பெரா பெற்ற ஓட்டுக்கள், 88,406. இவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் டேன் லங்ரன், 88,222 ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த, மற்ற நான்கு வேட்பாளர்களும் தோல்வியடைந்துள்ளனர்.

காற்றழுத்த தாழ்வு நிலை அரபிக்கடலுக்கு நகர்ந்தது: வானிலை மையம் தகவல்
சென்னை, நவ.8-
வங்கக்
கடலில் கடந்த மாதம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அரபிக்
கடலுக்கு நகர்ந்து புயலாக மாறி சோமாலிய நாட்டு கடற்கரையை கடந்தது.
அப்போது தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது.
இதன்
பிறகு வங்கக் கடலில் அந்தமான் தீவு அருகே மற்றொரு காற்றழுத்த தாழ்வு
நிலை உருவானது. இது புயலாக மாறி கடந்த 31-ந்தேதி மகாபலிபுரம் வழியாக
கரையை கடந்து ஆந்திரா சென்றது.
இந்த புயலுக்கு
நீலம் என்று பெயர் சூட்டி இருந்தனர். ஆந்திரா சென்ற இந்த புயலால் அங்கு
பலத்த மழை கொட்டியது. தமிழ்நாட்டில் நீலம் புயல் கரையை கடந்தபோது காற்று
கடுமையாக வீசியது. இதில் சென்னையில் ஏராளமான மரங்கள் சாய்ந்தன.
இந்த
நிலையில் தென்மேற்கு வங்க கடலில் இலங்கைக்கு அருகில் புதிய காற்றழுத்த
தாழ்வு நிலை நேற்று உருவாகியிருந்தது. இது தமிழகத்தை நோக்கி நகரும் என்று
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு அரபிக்கடலுக்கு
நகர்ந்து சென்றுவிட்டது.
இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:-
தென்மேற்கு
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை குமரி நோக்கி நகர்ந்து
கர்நாடாகாவை ஒட்டி உள்ள அரபிக்கடலை நோக்கி சென்றுவிட்டது. இதனால் தென்
மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்தான் மழை பெய்யும்.
வட
மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில பகுதிகளில் மட்டுமே மழை
கிடைக்கும். மொத்தத்தில் தமிழ்நாட்டில் படிப்படியாக மழை குறையும். நேற்று
அதிகபட்சமாக பெரியகுளத்தில் 9செ.மீ மழை பெய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 4-ம் வகுப்பு மாணவி பலி
மேலூர்,நவ.8-
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளாளபட்டியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் சுவேதா (வயது9). இவள் அங்குள்ள பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். இவள் கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாள். இதற்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தாள்.
நோய் குணமாக வில்லை. இந்த நிலையில் சுவேதாவுக்கு காய்ச்சல் அதிகமானது. இதனை தொடர்ந்து அவளை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று இரவு சிகிச்சை பலன் அளிக்காமல் சுவேதா பரிதாபமாக இறந்தாள். மேலூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் தாக்கி தினமும் ஒருவர் இறந்து வருகிறார்கள்.
இதுவரை மேலூர் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு 31 பேர் இறந்துள்ளனர். மேலூர் பகுதியில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

இளைஞர்களுக்கு துணிவிருந்தால்....: ஒபாமா சவால்
வாஷிங்டன்: இளைஞர்கள் தங்களுக்கு துணிவிருந்தால், கடும் பாதுகாப்புள்ள
வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தால், அவர்கள் கூறுவதை தான் காது கொடுத்து
கேட்கவுள்ளதாக மீண்டும் அமெரிக்க அதிபராகியுள்ள ஒபாமா சவால்
விடுத்துள்ளார். அமெரிக்காவின் அதிபராக இரண்டாம் முறையாக ஒபாமா
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் பின்னர் அவர் கூறுகையில், “எனது
குழந்தைகள் மலியா (14) மற்றும் சாஷா (11) குறித்து தான் பெருமைப்படுகிறேன்.
அவர்கள் தற்போது மிக வேகமாக வளர்ந்து, இளம்பெண்களாக, நம்பிக்கை
மிகுந்தவர்களாக வளர்ந்து வருகின்றனர். இயல்பாகவே அவர்களுடன் டேட்டிங் செல்ல
இளைஞர்கள் விரும்புவது இயற்கையே. இளைஞர்கள் தங்களுக்கு துணிவிருந்தால்,
கடும் பாதுகாப்புள்ள வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து என்னை வந்து
சந்திக்கட்டும். அவர்கள் கூறுவதை நான் காது கொடுத்து கேட்கிறேன்” என்று
தெரிவித்துள்ளார்.
மேலூரில் இதுவரை டெங்கு மற்றும் காய்ச்சலுக்கு 33 பேர் பலி
தீபாவளி முடிந்து சென்னை செல்ல சிறப்பு ரயில் சேவை இல்லை: பயணிகள் தவிப்பு
தீபாவளி முடிந்து சென்னை செல்ல இம் மாதம் 30-ம் தேதி வரை அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிந்து விட்டதால், பயணிகள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 6 நாள்களே உள்ளன. சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு இம் மாதம் 10, 12-ம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான முன்பதிவு தொடங்கிய 8 நிமிடங்களில் முடிந்துவிட்டது.
அதேபோல, தீபாவளிக்கு முன்பாக 2 சிறப்பு ரயில்கள் நாகர்கோவிலிலிருந்து சென்னைக்கு இயக்கப்படுகின்றன.
அவற்றில் ஒன்று சென்னை சென்ட்ரலுக்கு இம் மாதம் 11-ம் தேதி பிற்பகல் 1.20 மணிக்கும், மற்றொரு ரயில் எழும்பூருக்கு மாலை 5 மணிக்கும் புறப்படுகின்றன. அவற்றுக்கான முன்பதிவு இப்போது நடைபெறுகிறது.
தீபாவளி முடிந்த பிறகு நாகர்கோவிலிலிருந்து சென்னை செல்ல சிறப்பு ரயில்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வழக்கமாக இயக்கப்படும் கன்னியாகுமரி, அனந்தபுரி ரயில்களில் நவ. 13 முதல் 30 வரை முன்பதிவு டிக்கெட் இல்லை. குருவாயூர்-சென்னை ரயிலுக்கும் முன்பதிவு நவ. 13 முதல் 30 வரை முடிந்துவிட்டது.
கன்னியாகுமரியிருந்து வாரந்தோறும் புதன்கிழமை எழும்பூர் வழியாக தில்லி செல்லும் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸிலும் டிக்கெட் இல்லை. அதில் நவ. 14-ம்தேதி முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் 105 பேர் உள்ளனர்.
சிறப்பு பஸ்: நாகர்கோவிலிலிருந்து சென்னை, பெங்களூர் செல்ல அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்களில் இம் மாதம் 14, 15-ல் டிக்கெட் இல்லை. 16-ம் தேதி முதல் முன்பதிவு நடைபெற்று வருகிறது. அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். நாகர்கோவில் மண்டலம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அந்த பஸ்களுக்கு முன்பதிவு இல்லை எனக் கூறும் அதிகாரி ஒருவர், பயணிகளுக்கு வசதியாக பஸ்கள் தடையின்றி இயக்கப்படும் என்றார்.
முன்பதிவு இல் லாவிட்டாலும், டோக்கன் வழங்கினால்கூட நம்பிக்கையுடன் பஸ்ஸில் செல்ல வாய்ப்பு ஏற்படும என பயணிகள்
தெரிவிக்கின்றனர்.
ரயில்வே நிர்வாகத்தின் மீது வழக்கு எலி கடித்த சிறுவனின் தந்தை முடிவு
சென்னை:""கன்னியாகுமரி
எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில், குழந்தையை எலி கடித்ததற்கு, ரயில்வே மூலம்,
முறையான நடவடிக்கை வேண்டும். இல்லையேல், வழக்கு தொடர்வேன்,'' என,
குழந்தையின் தந்தை கூறினார்.நாகர்கோவிலை சேர்ந்தவர் மணிகண்டன். இவர், மனைவி
மற்றும் இரண்டு குழந்தைகளுடன், நேற்று முன்தினம் இரவு,
நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில், சென்னை திரும்பிக்
கொண்டிருந்தார்.இவர்கள், இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டியில், (எஸ்-4)
பயணம் செய்தனர். ரயில் வள்ளியூரை நெருங்கிக் கொண்டிருந்தபோது, படுக்கையில்
தூங்கிக் கொண்டிருந்த, இவரது ஒன்றரை வயது மகன், யஷ்வந்தின் கையில் எலி
கடித்து குதறியது.நேற்று காலை, ரயில் சென்னை எழும்பூர் வந்தடைந்ததும்,
நிலைய அதிகாரியிடம், மணிகண்டன் புகார் கடிதம் எழுதிக் கொடுத்தார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:தன் மகனை எலி கடித்ததும், உடனடியாக, மருத்துவ முதலுதவி கிடைக்கவில்லை. திருநெல்வேலி வந்த பிறகு தான், முதலுதவி செய்ய முடிந்தது. மதுரையில் டாக்டர் உதவி கேட்டிருந்தேன்; கிடைக்கவில்லை.ரயில் பெட்டி பராமரிப்பில், கோட்டை விட்டதால் தான், என் குழந்தைக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். எலி கடித்ததற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மணிகண்டன் கூறுகையில், ""குழந்தையை எலி கடித்ததற்கு, ரயில்வே மூலம், முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், வழக்கு தொடர உள்ளேன்,'' என தெரிவித்துள்ளார்.

லாரி ஓட்டுநரை அடித்துக் கொன்ற பொதுமக்கள்!
லால்குடி
அருகே உள்ள கொப்பாவளியை சேர்ந்த விவசாயி மூர்த்தி மீது லாரி
மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். லாரி ஓட்டுனர்
தப்பியோடுவிட்டார். இதனால் லாரியை பொதுமக்கள்
சிறைபிடித்து வைத்தனர்.
இதையடுத்து லாரியை மீட்க ஓட்டுநர் ராஜேஷ் என்பவரை போலீஸ் இன்று அழைத்து வந்தது. லாரியை எடுத்து சென்ற ராஜேஷை, கொப்பாளியை சேர்ந்த பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.
இதில் பலத்த காயம் அடைந்த ஒட்டுநர் ராஜேஷ் திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஓட்டுநர் ராஜேசின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் காவல்துறை இறங்கியுள்ளது.
விபத்து ஏற்படுத்தியவர் என நினைத்து தவறாக ஓட்டுநரை அடித்துக் கொன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடியூரப்பாவுக்கு 60 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவால் பா.ஜ.க அதிர்ச்சி
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் புதிய கட்சிக்கு 60 பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளது பா.ஜ.க. அதிர்ச்சி அடைந்துள்ளது.
ஊழல் புகாரை தொடர்ந்து கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலக்கினார் பி.எஸ்.எடியூரப்பா. இந்த நிலையில் புதிய கட்சி தொடங்க போவதாக கூறி வரும் எடியூரப்பாவிற்கு 60 பா.ஜ.க எம்.எல்.ஏக்களும், 11 எம்.பிக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் பா.ஜ.க. மேலிடத்தை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இதற்கான ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, தனது தலைமையிலான புதிய கடசி வருகிற டிசம்பர் 10ஆம் தொடங்கப்படும் என்றார்.
புதிய கடசி தொடங்கிய பிறகு 60 பா.ஜ.க எம்.எல்.ஏக்களும், 11 எம்.பிக்களும் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவார்கள் என்றும் எடியூரப்பா கூறினார்.

ரூ.235 கோடியில் 121 பாலங்கள் கட்டுகிறார் ஜெயலலிதா
தமிழகத்தில் சாலைப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.235 கோடி செலவில் 121 பாலங்களைக் கட்ட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்த ஆண்டு, 340.68 கோடி ரூபாய் மதிப்பில், சென்னை, அதன் சுற்றுபுறங்கள் மற்றும் ஏனைய மாவட்டங்களில் மேம்பாலங்கள், பாலங்கள், சுரங்க நடைபாதைகள், ஆகாய நடைபாதை ஆகியவற்றை அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த ஆண்டு ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் சாலை உட்கட்டமைப்பு பணிகளுக்காக 2,262 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சாலை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் மிகவும் முக்கியமானது பாலங்கள் அமைப்பது ஆகும். ஆறு மற்றும் நீர்பரப்புகளை சுலபமாக கடந்து சீரான வாகனப் போக்குவரத்து ஏற்படுத்துவதற்கு அவற்றின் குறுக்கே பாலங்கள் அமைக்கப்படுவது மிகவும் இன்றியமையாததாகும். எனவே முதல்வர் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 121 பாலங்கள் அமைப்பதற்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 3 பாலங்களும், கடலூர் மாவட்டத்தில் 4 பாலங்களும், விழுப்புரம் மாவட்டத்தில் 1 பாலமும், வேலூர் மாவட்டத்தில் 1 பாலமும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 பாலங்களும், சேலம் மாவட்டத்தில் 8 பாலங்களும், நாமக்கல் மாவட்டத்தில் 5 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 பாலங்களும், தர்மபுரி மாவட்டத்தில் 5 பாலங்களும், ஈரோடு மாவட்டத்தில் 5 பாலங்களும், கரூர் மாவட்டத்தில் 3 பாலங்களும், திருப்பூர் மாவட்டத்தில் 5 பாலங்களும்,
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 4 பாலங்களும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 6 பாலங்களும், அரியலூர் மாவட்டத்தில் 3 பாலங்களும், பெரம்பலூர் மாவட்டத்தில் 2 பாலங்களும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 பாலங்களும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 பாலங்களும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 7 பாலங்களும், திருவாரூர் மாவட்டத்தில் 2 பாலங்களும், மதுரை மாவட்டத்தில் 2 பாலங்களும், திண்டுக்கல் மாவட்டத்தில் 20 பாலங்களும், தேனி மாவட்டத்தில் 3 பாலங்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் 5 பாலங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 பாலங்களும், சிவகங்கை மாவட்டத்தில் 5 பாலங்களும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 பாலங்களும், விருதுநகர் மாவட்டத்தில் 3 பாலங்களும் என மொத்தம் 27 மாவட்டங்களில் 235 கோடி ரூபாய் செலவில் 121 பாலங்கள் கட்டப்படும்.
அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம், தமிழகத்தில் சாலை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு அடைந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் ஒன்றொடொன்று இணைக்கப்பட்டு, மக்கள் மற்றும் பொருட்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு சுலபமாகவும், விரைவாகவும், சென்றடைவதற்கு வழிவகை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

வழக்கம் போல மானிய விலை சிலிண்டர்கள் ; வீரப்ப மொய்லி அதிரடி
மானிய விலையில் வழக்கம்போல சிலிண்டர்களை வழங்கவும், நுகர்வோரை தொல்லைப்படுத்த வேண்டாம் என எண்ணெய் நிறுவனங்களை வீரப்ப மொய்லி கேட்டுக் கொண்டுள்ளார்.
சமையல் எரிவாயு சிலண்டஎகள் மீது மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டு திட்டம் அக்டோபரில் அமல்படுத்தப்பட்டது. ஆனால் ஆண்டுக்கு 6 மானிய விலை சிலிண்டர் என்ற இந்த திட்டத்தால் நுகர்வோர் கடும் அதிர்ப்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் புதிய அமைச்சரவை மாற்றத்தில் புதிதாக பெட்ரோலியத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள வீரப்ப மொய்லி இது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த கட்டுப்பாடு 2014-ல் மக்களவைத் தேர்தலில் எதிர்ப்பு எதிரொலிக்கும் என்று அந்த ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நேற்று நுகர்வோரை தொல்லைப்படுத்தக்கூடாது என்று அரசு கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்களிடம் வீரப்ப மொய்லி கேட்டுக் கொண்டுள்ளார்.
குறிப்பாக பண்டிகை காலங்களில் நுகர்வோரிடமிருந்து எந்த புகாரும் வராமல் பார்த்துகொள்ளும்படி அவர் அறிவிறுத்தியுள்ளார். சிலிண்டர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து அரசு பரிசீலனை செய்துவருகிறது.
இதற்கு கால அவகாசம் தேவை, ஆனால் அந்த சமையத்தில் நுகர்வோர் சிரமப்படகூடாது என்பதற்க்காகவே தற்போதைக்கு மானிய விலை சிலிண்டர்களை வழக்கம் போல் வழங்க வேண்டும் என வீரப்ப மொய்லி கூறியிருப்பதாக பெட்ரோலியத்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாக். அணிக்கு பலத்த பாதுகாப்பு: விளையாட்டுடன் அரசியலை கலக்க வேண்டாம்: பால்தாக்கரேக்கு ஷிண்டே பதிலடி
புதுடெல்லி, நவ.8-
2008-ம்
ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு பாகிஸ்தான்
கிரிக்கெட் அணி முதல் முறையாக டிசம்பர் மாதம் இந்தியா வந்து இரண்டு 20 ஓவர்
போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.
பாகிஸ்தான்
அணி வருகைக்கு சிவசேனா தலைவர் பால்தாக்கரே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியை விளையாட அனுமதிக்கமாட்டோம் என்று மிரட்டல்
விடுத்துள்ளார்.
இதற்கு மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது:-
விளையாட்டுடன்
அரசியலை கலக்கக் கூடாது. இந்தியா வரும் பாகிஸ்தான் அணிக்கு பலத்த
பாதுகாப்பு அளிக்கப்படும். மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்கள் இந்தியா
வருகிறார்கள். பாகிஸ்தான் வீரர்கள் மட்டும் வரவில்லை. அவர்களை பாதுகாப்பது
நமது கடமை.
இதனால் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பாக விவாதித்து வருகிறோம். மிகுந்த உஷார் நிலையில் உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.